"நாளைக்கு எதாவது இன்டர்வ்யு இருக்கா கார்த்திக்" என்றாள் அவனின் கண்களைப் பார்த்து.
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை, வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை என்று அவனது
அலைபேசியின் அழைப்புமணி அவளை குறுக்கிட்டது.
எரிச்சலடைந்தவளாய், "மொதல்ல இந்த ரிங்டோன மாத்து", என்று கடிந்துகொண்டாள்.
ஷ்ஷ். வாயிலிருந்து சத்தம் வராமல், உதட்டை மட்டும் அசைத்து, அம்மா என்றான் அவளிடம்.
அலைபேசியில்,
கார்த்தி...
ம்ம்...
"சாப்டயாப்பா?"
"இல்லமா, இனிமே தான்."
"ஏன்பா, காசு இல்லயா, காசு வேணும்னா சொல்லுப்பா. எங்க இருக்க கார்த்திக் இப்போ???"
"காலைல இன்டர்வ்யு போய்ருந்தேன், இப்ப ரூம்க்கு பஸ்ல போய்ட்டுருக்கேன்மா" ன்னு சொல்லும் போது, வினிதா இவன் தோள் மேல சாஞ்சு, காதுகிட்ட ப்ராடுனு முனுமுனுத்தாள்.
ஏ, அம்ம்மா."நான் பஸ்ல போய்ட்டு இருக்கேன்மா, நான் அப்பறம் பேசறேன்".
"சரிப்பா, உடம்ப பாத்துக்க, நல்லா சாப்டு, காசு வேணும்னா சொல்லுப்பா."என்று பேசிக்கொண்டிருக்கும்போதே போனை கட் பண்ணினான்.
"என்னடா, இன்னைக்கும் அம்மாட்ட பொய்யா?" என்றாள்.
"என்ன வினிதா பண்ண, நானும் ஒவ்வொரு இன்டர்வ்யுவும் அட்டன் பண்றேன், இதுவரைக்கும் எந்த இன்டர்வ்யுலயும் பர்ஸ்ட்டு ரவுண்டு ஷார்ட்லிஸ்ட் ஆகி செகண்ட் ரவுண்டு"
கார்த்திக்கின் இந்த டயலாக் இவளுக்கு மனப்பாடமாகி விட்டதால்,"அடுத்த ஸ்டாப்ல எறங்கனும்" என்று சொல்லி இவன் பேச்சை நிறுத்தினாள்.
"எனக்கு தெரியாமலா, உன் ரூம் வர டெய்லி நைட் உன்கூடவர்றேன்."
(நேர்த்தியான கருங்கூந்தல், மெல்லிய புருவம், கூரிய விழி அதை மேலும் அழகூட்டும் கண்மை, சின்ன மூக்கு, சரியான விகிதத்தில் அமைந்த சிவந்த உதடு, மனதில் எளிதாக பதியும் முகம்-வினிதா, கார்த்திக்கின் காதலி. தனியார் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் பெண்மணி. வேலைக்கு போகாத இவனுக்கு, வேலை பார்க்கும் காதலி இருந்தால் இவன் வேலை என்னவென்று நான் சொல்ல வேண்டுமாயென்ன?)
கொஞ்ச நேரத்துக்கு இருவரும், பார்த்து கொள்ளவில்லை, பேசவும் இல்லை. அமைதியாக இருந்தனர்.
வினிதா, கார்த்திக்கின் தொடையிலிருந்த அவனது கையை, தனது கையால், பட்டையிடுவது போல், நான்கு விரலால் , வருடி, "எறங்கனும்", என்றாள்.
இருவரும் இறங்கி, அவளது ரூம் வரை நடந்து சென்றனர். இருவரும் சிறிது நேரத்துக்கு எதுவும் பேசவில்லை. வேலையில்லாத ஒவ்வொரு ஆணும், சுயமரியாதை எதிர்பார்ப்பது ஒன்றும் விந்தையில்லை.
வினிதா மௌன அஞ்சலியைக் களைத்தாள். " மூக்குக்கு மேல கோவத்த பாரு, அப்டியே பெருசா இருக்குற அந்த மூக்க கடிச்சு தின்ன போறேன் பாரு" என்று செல்லமாக கொஞ்சிக்கொண்டே, அவனது கையை பற்றினாள்.
இவன் பதில் எதும் பேசவில்லை.
"சரி, கார்த்திக். நாளைக்கு எதும் இன்டர்வ்யு இருக்கா?, நான் குடுத்த காசு இருக்கா இல்ல தீந்துருசா?, லாஜிடெக் இன்டர்வ்யு அட்டன் பண்ணியே கால் வந்துச்சா?" என்று கேள்விகளை அடுக்கினாள்.
"லாஜிடெக், ஹெக்சாவேர் இரண்டுலயும் கடைசி ரவுண்டு வர அட்டன் பண்ணிடேன். வழக்கம்போல, கால் பண்றேன்னு சொன்னாங்க. ஒன் மன்ந்த் ஆச்சு, நோ யூஸ். நாளைக்கு எதும் இன்டர்வ்யு இருக்கானு பாத்துசொல்லு. வீட்ல வேற ரொம்ப பீல் பண்றாங்க." என்று குமுறினான்.
(தனக்கு பணம் வேணும்னு எப்படி அவகிட்ட கேட்பான். மாதாமாதம் இவன் செலவுக்கு ஏழாயிரம் தருகிறாள். இந்த மாதம் அதுவும் பத்தாமல், போன வாரம் தான் ஆயிரம் ரூபா தந்தாள். திரும்பி அவன் ரூமுக்கு கிரீன் போர்டு பஸ்சில் போகுமளவு தான் அவன் கையில் காசு இருக்கு என்று எப்படி சொல்லுவான். இன்னும் 5 நாட்கள் இருக்கிறது, இந்த மாதம் முடிய...)
"ஓகே, எல்லாமே கூடிய சீக்கிரம் சரியாய்டும். உனக்கும் இப்போ டைம் ஆச்சு, நீ பாத்து போய்ட்டு வா. ஐ லவ் யு கார்த்திக்."
திரும்பி பார்க்காமல், வேகமாக நடந்தான், தனது வேதனைகளையும், ஏக்கங்களையும், ஏந்திக்கொள்வதாய் நினைத்து, தன்மானத்தை ஏந்திச்சென்றான்.
மறுநாள் காலை,
அமைதியாக ரூம் ஜன்னல் வழியே மெதுவாக இறங்கி, உறங்கிக்கொண்டிருக்கும் கார்த்திக்கின் கன்னத்தில் சுரீரென்று சூரிய ஒளி அடித்து. எழும்ப மனமில்லாமல், போர்வையை தலைவரை போர்த்திப்படுத்தான்.
புத்தியுள்ள மனிதரெல்லாம்.... இவன் தூக்கத்தை கலைக்குமாறு அலறியது அலைபேசி.
"ஹலோ, கேன் ஐ ஸ்பீக் டு கார்த்திக்?"
கனத்த குரல் அவன் தூக்கத்தை முற்றிலும் கலைத்தது. அலுத்துப்போனவனாய், "யஸ் கார்த்திக் ஸ்பீக்கிங்க்."
"ஹயம் கவின், காலிங் ஃப்ரெம் ..."
பீப் பீ்ப் என மற்றுமொரு அழைப்பு இடையூறு செய்ய, யாரென்று பார்த்தான். வினிதா காலிங். 5 குறுந்தகவல் வேறு. நேற்று நடந்ததை சில நொடிகள் அசைப்போட்டான். பின் அலைபேசி நினைவுக்கு வந்து, காதில் வைத்தான்.
"யுவர் மெயில் ஐடி ஸ் கார்த்திக் அட் ஜிமெயில் டாட் காம், ரைட்?"
"யஸ்."
"ஓகே. மிஸ்டர் கார்த்திக். ஐ சென்ட் ஆல் த டீடெல்ய்ல்ஸ் டு யுவர் மெயில். பி இயர் ஆன் மண்டே மார்னிங் டென் ஒ க்ளாக். இஃவ் யு ஹேவ் எனி டவுட், கால் மி. ஓகே"
"ஓகே, ஸார், மே ஐ நோ யுவர் நேம்?"
லேசான சிரிப்புடன், "கவின்".
இவன் அழைப்பை துண்டித்தான். " கால் மி பேக் வினிதா " எனும் குறுந்தகவலை அவன் காதலிக்கு அனுப்பினான்.
சில நொடிகளில் அழைப்பு வந்தது,"டேய். யார்டடா இப்ப பேசிட்டு இருந்த?"
"யாரோ, கவினாம். கம்பெனி இன்டர்வ்யு. மெயில்ல டீடெல்ய்ல்ஸ் இருக்கு, பாத்துசொல்லு."
"ஓகே, இத நான் செக் பண்ணிட்டு, வேளச்சேரில ஒரு இன்டர்வ்யு இருக்கு. இரண்டோட அட்ரசயும் மெசேஸ் பண்றேன். போய்ட்டு வா."
"ஓகே, வினிதா." காசு இருந்தாதான என மனதிற்குள் சிரி்த்துக்கொண்டே அழைப்பை துண்டித்தான்.
அரைமணி நேரமாகியும், எந்த குறுந்தகவலும் வராததால், "வாட் ஹாப்பன்ட், ஆர் யு பிஸி வினிதா?" என வினிதாவிற்க்கு குறுந்தகவல் அனுப்பினான்.
"ஐ ஹேவ் டு டெல் யு சம்திங். வான்ட் டு மீட் யு நௌ" வினிதா பதில், இருபது நிமிடம் கழித்து.
ஷால் ஐ கம் டு யுவர், என டைப் செய்யும் போது, இன்னொரு, குறுந்தகவல்.
"ஹயம் ஆன் த வே டு யுவர் ரூம். கெட் ரெடி. வீ வில் மீட் இன் காஃபி டே"-வினிதா.
கையி்ல காசு இல்ல, இவ கூப்புட்றா, காஃபி வாங்கி தர சொன்னானா, அய்யோ, காஃபி டே ல வேற ரேட் அதிகமா இருக்குமே, நாயர் கடனா அக்கவுண்ட் இருக்கு, என புலம்பிக் கொண்டே தயாரானான்.
"ஹயம் இன் காஃபி டே ஷாப், கம் சூன் கார்த்திக்:)" எனும் குறுந்தகவலை அனுப்பிவிட்டு, தனது ஹேன் பேக்கிலிருந்து சுவிட் பாக்சும், மொபைலில் அவனது மெயிலையும் ஓப்பன் பண்ணி, டேபிள் மேல் வைத்து காத்திருந்தாள்.
---
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக